மண்டல அளவில் பெண்கள் கபடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் மண்டல அளவில் நடந்த பெண்களுக்கான கபடி போட்டியில், வானுார் ஸ்ரீஅரவிந்தர் அரசு கல்லுாரி முதலிடம் பிடித்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் விழுப்புரம் மண்டல அளவில் பெண்களுக்கான கபடி போட்டி கடந்த 5ம் தேதி விழுப்புரத்தில் நடந்தது. போட்டியில், விழுப்புரம் மண்டல அளவில் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில், ஸ்ரீஅரவிந்தர் அரசு கல்லுாரி முதல் இடத்தையும், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி 2வது இடத்தையும், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி அணி மூன்றாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற அணியினரை கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.