மேலும் செய்திகள்
மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு
12-Nov-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணி துவங்கியது.பானாம்பட்டு ஊராட்சியில், கணக்கெடுக்கும் பணியை, கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் செயலியில், என்னென்ன உள்ளீடுகள் கேட்கிறது. எவ்வாறு அலுவலர்கள் பதிவேற்றம் செய்கின்றனர் குறித்து கேட்டறிந்தார்.இந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை இணை இயக்குனர் சீனிவாசன், கோலியனுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரேமலதா, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வெங்கடேசன், மின் மாவட்ட மேலாளர் பிரவீனா, விழுப்புரம் வருவாய் தாசில்தார் கனிமொழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
12-Nov-2024