உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய தொழிலாளியை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் மற்றும் திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது, இரு தினங்களுக்கு முன் மயிலம் - விழுப்புரம் இடையே மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர். இதில், ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், மயிலம் அடுத்த சித்தணியைச் சேர்ந்த அருள், 50; என்ற தொழிலாளி, ரயில்கள் மீது கல் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருளை பிடித்து விசாரித்தனர். அவர், ஆடு மேய்த்தபோது, தண்டவாளம் அருகிலிருந்த ஆடுகளை விரட்டவே கல் எறிந்ததாக தெரிவித்துள்ளார். அருளை கைது செய்த போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி