கிணற்றில் குளித்த தொழிலாளி சாவு
விழுப்புரம்; காணை அருகே கிணற்றில் குளித்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார். காணை அருகே குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சிவராஜ், 30; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 4ம் தேதி இதே கிராமத்தில் உள்ள அய்யனார் என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.