உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி

கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தனியார் கல்லுாரி பஸ் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி, 55; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி டி.எடையாரில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது. படுகாயமடைந்த கருணாநிதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று மதியம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !