மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
24-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி இறந்தார்.சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அடுத்த சிறுமடை கிராமத்தைச் சேர்ந்த குமார், 52; இவர், மேல்மருவத்துாரில் ஓட்டலில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
24-Jun-2025