உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே கள்ளக்காதல் தகராறு தொழிலாளியின் மர்ம உறுப்பு கட்

விழுப்புரம் அருகே கள்ளக்காதல் தகராறு தொழிலாளியின் மர்ம உறுப்பு கட்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்காதல் தகராறில், நண்பரின் மர்ம உறுப்பை நறுக் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 45; இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார், 39; கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக இருவரும் நண்பர்கள். இருவரும், அப்பகுதியை சேர்ந்த திருமணமான 43 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மரகதபு ரம் அய்யனார் கோவில் அருகே சங்கர் மது குடித்துள்ளார். அப்போது, அங்கு வந்த சரத்குமாருக்கும் சங்கருக்கும் இடையே, கள்ளக்காதல் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரத்குமார், கரும்பு வெட்டும் கத்தியால் சங்கரின் தலை, கழுத்தில் வெட்டினார் . மயங்கி விழுந்த அவரது மர்ம உறுப்பை அறுத்தும், ஒரு கண்ணை கத்தியால் குத்தி சேதப்படுத்தினார். ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சங்கரை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சங்கர் மனைவி அஞ்சுலட்சம் கொடுத்த புகாரில், சரத்குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ