உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உழைக்கும் பெண்கள் சங்கமம் நிகழ்ச்சி

உழைக்கும் பெண்கள் சங்கமம் நிகழ்ச்சி

விழுப்புரம், : சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உழைக்கும் பெண்கள் சங்கமம் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமதிலகம் முன்னிலை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கம் மாநில துணைச் செயலாளர் கீதா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மலர்விழி சிறப்புரையாற்றினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.பெண் பேதமின்றி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணியிடங்களில் பாதுகாப்பு வழங்குவதில், அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை