மின் நுகர்வோர் குறைதீர் மன்ற பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்:விழுப்புரம் மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பு;விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், உறுப்பினர் பதவிக்கு (சமூக ஆர்வலர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியாற்ற விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, வரும் ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் பவர் அவுஸ் சாலை மின்வாரிய அலுவலகம், tnebnet.org என்ற இமெயில் மூலமும், 94458 55711 என்ற மொபைல் எண்ணில் தகவல் பெறலாம்.