திருமணம் செய்வதாக செவிலியரை ஏமாற்றிய வாலிபர் கைது
திண்டிவனம்: திண்டிவனத்தில் செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் தமிழ்செல்வன், 23; திண்டிவனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், திண்டிவனத்தில் தனியார் கிளினிக் ஒன்றில் செவிலியராக பணிபுரியும் பெண்ணை காதலித்துள்ளார். அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதின் பேரில், காதலர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து செவிலியர் தமிழ்செல்வனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசில் செவிலியர் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, தமிழ்செல்வனை கைது செய்தனர்.