உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது

மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கல்லுாரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல் போன், பணம் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தையைச் சேர்ந்த சந்திரபோஸ் மகன் அன்பரசன், 18: விக்கிரவாண்டியில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வி.சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே தனியாக மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அன்பரசன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அன்பரசன் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் திரண்டு வாலிபரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த அஜய், 28; எனவும், இவர் மீது திண்டிவனம் போலீசில் 12 திருட்டு வழக்குகளும், மயிலம் போலீசில் ஒரு திருட்டு வழக்கு என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அஜய் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை