உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 

பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளிஎதிரே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் கப்பியாம்புலியூர் வி.ஜி.பி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோபி,19 :என தெரியவந்தது.போலீசார் நடத்திய சோதனையில் அவரது பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 7 பாலீத்தீன் பாக்கட்டுகளிலிருந்து 25 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ஆயிரம் ரூபாய், மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை