மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
26-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. மழவராயனுார் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த அழகுநாதன் மகன் பாரதி, 28; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
26-Aug-2025