மேலும் செய்திகள்
நீரில் மூழ்கி தொழிலாளி பலி
20-Dec-2024
விழுப்புரம்: வளவனுார் அருகே லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் அருகே பனங்குப்பம் கிராமத்தில் அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, வளவனுார் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்ற சோதனை செய்தனர். அங்குள்ள, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் அருள்ஜோதி,30; மூன்று எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, மொபைலை பறிமுதல் செய்தனர்.
20-Dec-2024