மேலும் செய்திகள்
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
24-Sep-2025
விழுப்புரம்; விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக்கில் அதிவேகமாக சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் வழுதரெட்டி வீரன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அவியனுாரை சேர்ந்த அருள்முருகன், 30; என்பவர் தனது பைக்கில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அருள்முருகனை கைது செய்தனர்.
24-Sep-2025