உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முகிலன்,26; இவர், கடந்த 23ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் தனது பைக்கை நிறுத்தி பூட்டி விட்டு திருப்பதி சென்றார். பின், மறுநாள் வந்து பார்த்த போது வாகனம் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழரசன்,21; என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ