குண்டாசில் இளைஞர் கைது
திண்டிவனம்: கஞ்சா விற்பனை வழக்கில் கைதான இளைஞர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், சூ.காட்டேரி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன் சக்திவேல், 19; இவரை, கஞ்சா விற்பனை செய்த வழக்கில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், சக்திவேலை குண்டாசில் சிறையில் அடைப்பதற்கான ஆணை நகலை, கடலுார் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர். இதை தொடர்ந்து, சக்திவேல் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.