உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

திண்டிவனம்,: திண்டிவனத்தில் தட்டு வண்டியில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் செல்வதுரை, ஐயப்பன் ஆகியோர், நேற்று மாலை 6:00 மணிக்கு, திண்டிவனம்-மயிலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் பொருத்தப்பட்ட தட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். தட்டு வண்டியில் 265 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. தட்டுவண்டியை ஓட்டி வந்த மயிலம் ஜெ.ஜெ., நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்திவேல், 25; என்பவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ