உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ வில் கைது

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ வில் கைது

கண்டமங்கலம் : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடலுாரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடலுாரில் பூக்கடையில் வேலை செய்து வந்த, திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷா மகன் ஜியாயுதின்,19; என்பவரும், மாணவியும் காதலித்து வந்தனர்.கடந்த 19ம் தேதி காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஜியாயுதின் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. போலீசார் மாணவியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். ஜியாயுதினை போக்சோ வழக்கில் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி