உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா சங்கீதமங்கலம் அருகே உள்ள பெருங்கலம்பூண்டியை சேர்ந்த முனுசாமி மகன் ஓமகேசவன்,28: கார் டிரைவர். இவர் விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தையில் மனைவி ஜெயசூர்யாவுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் மனமுடைந்த அவர் கடந்த 25 ம் தேதி அரளிவிதை அரைத்து குடித்து மயங்கினார். உடன் இருந்தவர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி