மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16-Jan-2025
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே வேன் மோதி பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் சதீஷ்குமார், 26; விவசாயி.இவர் அவலுார்பேட்டையிலிருந்து நேற்று மாலை 4;30, மணிக்கு மேல்மலையனுார் நோக்கி கோவில்புரையூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மேல்மலையனுாரிலிருந்த வந்த வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதில் சதீஷ்குமார் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமைனக்கு அனுப்பிவைத்தனர்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Jan-2025