உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பலி

பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பலி

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார். பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார் அருகே உள்ள பிலிமிசை கூத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சக்திமுருகன், 28; இவரது மனைவி அர்ச்சனா,26: தற்போது, 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சக்தி முருகன் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பல்சர் பைக்கில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இரவு 8:30 மணி அளவில் விக்கிரவாண்டி பாலாஜி நகர் அருகே வரும்பொழுது எதிர் பாராத விதமாக சாலையில் உள்ள சென்டர் மீடியனில் பைக் மோதியதில் நிலை தடுமாறு கீழே விழுந்து இறந்தார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தி முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அவரது தந்தை ரங்கசாமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை