டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு
செஞ்சி: செஞ்சி அருகே ஏரிக்கரை சாலையில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலியானார். அனந்தபுரம் கே.கே.தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் சிவகுரு 19. இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் புலிவந்தி ஏரிக்கரை மீது அன்னியூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருடன் டிராக்டரில் சென்றார். டிராக்டரை திருநாவுக்கரசு ஓட்டி வந்தார். சிவகுரு உட்கார்ந்து வந்தார். ஏரி மதகு அருகே வந்த போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கு எதிர்புறம் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிவகுரு டிராக்டரின் அடியில் சிக்கி இறந்தார். படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.