உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் காந்தி மகன் சுப்புராயன், 31; சமையல் வேலை செய்து வந்தார். இவருக்கும், பானாம்பட்டை சேர்ந்த ஷீலா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. குழந்தை இல்லாததால், தம்பதியினர் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பானாம்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சுப்புராயன் மது அருந்திவிட்டு சென்றதால், அவரது மனைவிக்கும், அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த சுப்புராயன் அங்குள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை