உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிக விளைச்சலுக்கு சிங்க்சல்பேட் இட அறிவுரை

அதிக விளைச்சலுக்கு சிங்க்சல்பேட் இட அறிவுரை

செஞ்சி: வல்லம் ஒன்றிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற சிங்க் சல்பேட் இட வேண்டும் என வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வல்லம் ஒன்றிய கிராமங்களில் விவசாயிகள் நவரை பருவத்தில் நெல் விதைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து நடவு செய்யக்கூடிய பகுதிகளில் சத்து குறைபாடு ஏற்படுவதால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் துார்களின் எண்ணிக்கை அதிகரித்திடவும், அதிக பதர்கள் வருவதை தவிர்த்திடவும், சீரான வளர்ச்சிக்காகவும் அடி உரமாக ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் சிங்க் சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து துாவிடவேண்டும்.இதற்கு தேவையான உரத்தை மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வல்லம், பென்னகர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !