உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாழ்வான மின்வயர்களால் விபத்து அபாயம்

தாழ்வான மின்வயர்களால் விபத்து அபாயம்

நரிக்குடி : நரிக்குடி பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக இருப்பதால் தீ விபத்துக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சப்படும் வகையில் உள்ளது. நரிக்குடி அருகே இசலி, சொட்டமுறி, துய்யனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளது. தாழ்வாக இருக்கும் வயர் தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்கள் மேல் வயர் உரசி 'ஷாக்' அடிக்கவும், உயிர் பலி ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்த மாதம் துய்யனூரில் தாழ்வாக இருந்த மின் வயர் உரசி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'வைக்கோல் போர்' முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அபாயத்தில் இருப்பது தெரிந்தும் மின் வாரிய அதிகாரிகள் சரி செய்ய முன் வரவில்லை. வயர்கள் தாழ்வான நிலையில் தான் உள்ளது. உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் வயர்களை மக்கள் மீது உரசாத அளவில் உயர்த்திட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ