உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாயூரநாத சுவாமி கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்

மாயூரநாத சுவாமி கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. முன்னதாக அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சிறப்பு அலங்காரத்தில் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஜூலை 6- ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஜூலை 8- காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி