உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2025 தமிழக பட்ஜெட் பேட்டிகள்/

2025 தமிழக பட்ஜெட் பேட்டிகள்/

கடன் செலுத்தியோருக்குமுன்னுரிமை அளித்திருக்கலாம்விருதுநகரில் மினி டைட்டில் பார்க், கல்லுாரி படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற புதிய அறிவிப்புகள் வரவேற்கப்படுகிறது. சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் தொழில்முனைவோர்கள் கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த முறை கடன் பெறும் போது ஒரு சதவீத போனஸ் வட்டி குறைப்பு செய்யும் அறிவிப்பு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கல்வித்துறையில் ரூ.43 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக கூற வேண்டும். அதை பற்றிய விவரங்கள் தெளிவாக வெளியிட வேண்டும்.கார்த்திகேயன், செயலாளர், அனைத்து வியாபாரிகள் சங்கம், விருதுநகர்.....................................அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமேஅரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள், சாலை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏதாவது அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்த நிலையில் எதுவும் வரவில்லை. இது தி.மு.க., அரசின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும் சூழலில் இதிலும் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் வரவில்லை. எதிர்பார்த்து ஏமாந்ததே மிச்சம். ஜாக்டோ ஜியோ தலைவர்களை அழைத்து முதல்வர் பேசியதால் ஊழியர்கள் சமாதானமாகி விடுவர் என நினைப்பது தி.மு.க., அரசுக்கு பலவீனமே. அரசு ஊழியர்களின் குமுறல்களை புரிந்து கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்ற முன்வர வேண்டும்.வைரவன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்..................................உணவுக்கு அல்லாடும்சத்துணவு ஊழியர்கள்தமிழகத்தில்42 ஆண்டுகளுக்கும்மேலாக உள்ள முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தில் பாதி மையங்களுக்கு மேல் காலிப்பணியிடமாக இருந்த போதிலும், அதை சத்துணவு ஊழியர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் 2017ல் இருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கிய சத்துணவு ஊழியர், ஓய்வு பெற்ற பின் கடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் குறைந்த ஓய்வூதியத்தை பெற்று உணவுக்கு அல்லாடும் சூழல் உள்ளது.இது தான் இன்றைய சூழல். இது குறித்து ஏதேனும் அறிவிப்பு இருக்குமா என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமாக தான் இந்த பட்ஜெட் உள்ளது.சுதந்திர கிளாரா, மாவட்ட செயலாளர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்------------* சுற்றுலா வளர்ச்சி மேம்படும்சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொல்லியல் மற்றும் சுற்றுலாத்துறைக்கு சிறப்பு கவனம் இந்த பட்ஜெட்டில் செலுத்தப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் என்ற அறிவிப்பு வட இந்திய மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி உலக அளவில் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு. இதன் மூலம் ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். பணிபுரியும் பெண்களுக்கான தோழிகள் விடுதி வரவேற்கத்தக்கது. இதேபோன்று மாணவிகளுக்கு முக்கிய நகரங்களில் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதி அவசியமான ஒன்று. மாணவ மாணவியர்களுக்கு 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்துவது பாராட்ட தக்கது.செல்லப் பாண்டியன், பேராசிரியர், அருப்புக்கோட்டை : ........ஈட்டு விடுப்பு அறிவிப்புஏமாற்று வேலைதமிழக பட்ஜெட்டில் சொல்லும் படியாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் திருச்சுழி தொகுதிக்கு என வளர்ச்சி திட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஈட்டு விடுப்பு அடுத்த ஆண்டு என அறிவிப்பு வந்துள்ளது. 2026ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் எப்படி சாத்தியமாகும். இது ஏமாற்று வேலை. விவசாயிகளுக்கான அறிவிப்பு எதுவும் கிடையாது. மக்களை வஞ்சிக்கும் செயல். சாமானிய மக்களுக்கு எந்த ஒரு திட்டமும் சொல்லும் படியாக இல்லை. திருச்சுழி தொகுதியில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு கிடையாது. மொத்தத்தில் எதுக்கும் பயன்படாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது, வேதனைக்குரிய விஷயம்.லீலாவதி, குடும்பத் தலைவி, காரியாபட்டி. .....அரசு ஊழியர்க்கு அதிர்ச்சி தரும் பட்ஜெட்தமிழக அரசு பட்ஜெட்டில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம்தோறும் ரூ 2000 உதவித்தொகை அறிவிப்பு, விருதுநகரில் புதிய மினி டைட்டில் பூங்கா அறிவிப்பு, விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். .பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டு இணைப்பு உடற்கல்வி பாடத்திற்கு கிடைத்த பெருமை .20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லட் வழங்குவது படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கு உதவியாக இருக்கும். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எஸ்.சுந்தர், முதுகலை வணிகவியல் ஆசிரியர், சாத்துார்.....................மின் கட்டண சிக்கல்: தமிழக பட்ஜெட்டில் துறைவாரியான ஒதுக்கீட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ. 1975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறைவே. ஏற்கனவே தொழிலாளர்களின் திறன் குறைவதால் வட மாநிலத்தினர் வருகை அதிகரித்துள்ளது. ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து தொழில்களுக்கு ஆதாரமான மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளனர். இதனால் பெரும்பாலான தொழில்கள் முடங்கி உள்ளது. தொழிலாளர்களுக்கு பணி குறைப்பு, தற்காலிக விடுப்பு வழங்கவும் இது காரணமாக உள்ளது. மின் கட்டண சிக்கல் குறித்து எந்தவித தீர்வும் அறிவிக்கப்படாதது தொழிலாளர்களுக்கும் ஏமாற்றமே.குருசாமி ராஜா, மில் தொழிலாளி, ராஜபாளையம்.---------------------------குரு சிறு தொழில்களைபாதுகாக்க வேண்டும். சிவகாசி, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் பெண்களின் போக்குவரத்திற்கு பயனுள்ளதாய் இருக்கிறது. அதே வேளையில் எங்களின் வாழ்வாதாரமாய் உள்ள அச்சகம், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் போன்ற குறு, சிறு தொழில் நிறுவனங்கள் எவ்வித சிரமமும் இன்றி இயங்கினால் தான் எங்களைப் போன்ற பெண்களின் வேலைக்கு உத்தரவாதம் கிடைக்கும். எனவே தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் அதன் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் பட்ஜெட் அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். குரு சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஜெயலட்சுமி, அச்சக தொழிலாளி................வரவேற்பும், ஏமாற்றமும் உள்ளது.தமிழக அரசின் பட்ஜெட்டில் மாவட்டம் வாரியாக தொழில் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது வியாபாரம் செய்து வருவோர் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் இல்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது. வீடுகள் கட்டும் திட்டம், கல்வி திட்டம், பெண்கள் முன்னேற்றம், பறவைகள் சரணாலயம் அமைத்தல் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சொந்த கட்டிடம் இல்லாத நூலகங்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. இதில் அரசு கவனம் செலுத்தி இருக்கலாம். சுய தொழில் மேற்கொள்ளும் சாதாரண வியாபாரிகளை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்கி இருக்க வேண்டும்.-நித்தியானந்தம், வியாபாரி, ஸ்ரீவில்லிபுத்துார்*பல்வேறு தரப்பினர் சொல்வது என்னநமது நிருபர் குழுநேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தென்மாவட்டங்களின் தொழில்வளர்ச்சிக்கு பெரிய திட்டங்கள் இல்லை; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்படவில்லை; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்று அதிருப்திகள் பல. மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம், மகளிர், முதியோருக்கான சமூக நல திட்டங்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.இப்படி பல்துறையினரின் பட்ஜெட் குறித்த விமர்சனங்கள் இதோ.கடன் செலுத்தியோருக்குமுன்னுரிமை அளித்திருக்கலாம்விருதுநகரில் மினி டைட்டில் பார்க், கல்லுாரி படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற புதிய அறிவிப்புகள் வரவேற்கப்படுகிறது. சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் தொழில்முனைவோர்கள் கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த முறை கடன் பெறும் போது ஒரு சதவீத போனஸ் வட்டி குறைப்பு செய்யும் அறிவிப்பு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கல்வித்துறையில் ரூ.43 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக கூற வேண்டும். அதை பற்றிய விவரங்கள் தெளிவாக வெளியிட வேண்டும்.கார்த்திகேயன், செயலாளர், அனைத்து வியாபாரிகள் சங்கம், விருதுநகர்.....................................அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமேஅரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள், சாலை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏதாவது அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்த நிலையில் எதுவும் வரவில்லை. இது தி.மு.க., அரசின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும் சூழலில் இதிலும் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் வரவில்லை. எதிர்பார்த்து ஏமாந்ததே மிச்சம். ஜாக்டோ ஜியோ தலைவர்களை அழைத்து முதல்வர் பேசியதால் ஊழியர்கள் சமாதானமாகி விடுவர் என நினைப்பது தி.மு.க., அரசுக்கு பலவீனமே. அரசு ஊழியர்களின் குமுறல்களை புரிந்து கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்ற முன்வர வேண்டும்.வைரவன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்..................................உணவுக்கு அல்லாடும்சத்துணவு ஊழியர்கள்தமிழகத்தில்42 ஆண்டுகளுக்கும்மேலாக உள்ள முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தில் பாதி மையங்களுக்கு மேல் காலிப்பணியிடமாக இருந்த போதிலும், அதை சத்துணவு ஊழியர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் 2017ல் இருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கிய சத்துணவு ஊழியர், ஓய்வு பெற்ற பின் கடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் குறைந்த ஓய்வூதியத்தை பெற்று உணவுக்கு அல்லாடும் சூழல் உள்ளது.இது தான் இன்றைய சூழல். இது குறித்து ஏதேனும் அறிவிப்பு இருக்குமா என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமாக தான் இந்த பட்ஜெட் உள்ளது.சுதந்திர கிளாரா, மாவட்ட செயலாளர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்------------* சுற்றுலா வளர்ச்சி மேம்படும்சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொல்லியல் மற்றும் சுற்றுலாத்துறைக்கு சிறப்பு கவனம் இந்த பட்ஜெட்டில் செலுத்தப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் என்ற அறிவிப்பு வட இந்திய மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி உலக அளவில் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு. இதன் மூலம் ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். பணிபுரியும் பெண்களுக்கான தோழிகள் விடுதி வரவேற்கத்தக்கது. இதேபோன்று மாணவிகளுக்கு முக்கிய நகரங்களில் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதி அவசியமான ஒன்று. மாணவ மாணவியர்களுக்கு 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்துவது பாராட்ட தக்கது.செல்லப் பாண்டியன், பேராசிரியர், அருப்புக்கோட்டை : ........ஈட்டு விடுப்பு அறிவிப்புஏமாற்று வேலைதமிழக பட்ஜெட்டில் சொல்லும் படியாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் திருச்சுழி தொகுதிக்கு என வளர்ச்சி திட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஈட்டு விடுப்பு அடுத்த ஆண்டு என அறிவிப்பு வந்துள்ளது. 2026ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் எப்படி சாத்தியமாகும். இது ஏமாற்று வேலை. விவசாயிகளுக்கான அறிவிப்பு எதுவும் கிடையாது. மக்களை வஞ்சிக்கும் செயல். சாமானிய மக்களுக்கு எந்த ஒரு திட்டமும் சொல்லும் படியாக இல்லை. திருச்சுழி தொகுதியில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு கிடையாது. மொத்தத்தில் எதுக்கும் பயன்படாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது, வேதனைக்குரிய விஷயம்.லீலாவதி, குடும்பத் தலைவி, காரியாபட்டி. .....அரசு ஊழியர்க்கு அதிர்ச்சி தரும் பட்ஜெட்தமிழக அரசு பட்ஜெட்டில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம்தோறும் ரூ 2000 உதவித்தொகை அறிவிப்பு, விருதுநகரில் புதிய மினி டைட்டில் பூங்கா அறிவிப்பு, விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். .பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டு இணைப்பு உடற்கல்வி பாடத்திற்கு கிடைத்த பெருமை .20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லட் வழங்குவது படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கு உதவியாக இருக்கும். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எஸ்.சுந்தர், முதுகலை வணிகவியல் ஆசிரியர், சாத்துார்.....................மின் கட்டண சிக்கல்: தமிழக பட்ஜெட்டில் துறைவாரியான ஒதுக்கீட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ. 1975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறைவே. ஏற்கனவே தொழிலாளர்களின் திறன் குறைவதால் வட மாநிலத்தினர் வருகை அதிகரித்துள்ளது. ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து தொழில்களுக்கு ஆதாரமான மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளனர். இதனால் பெரும்பாலான தொழில்கள் முடங்கி உள்ளது. தொழிலாளர்களுக்கு பணி குறைப்பு, தற்காலிக விடுப்பு வழங்கவும் இது காரணமாக உள்ளது. மின் கட்டண சிக்கல் குறித்து எந்தவித தீர்வும் அறிவிக்கப்படாதது தொழிலாளர்களுக்கும் ஏமாற்றமே.குருசாமி ராஜா, மில் தொழிலாளி, ராஜபாளையம்.---------------------------குரு சிறு தொழில்களைபாதுகாக்க வேண்டும். சிவகாசி, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் பெண்களின் போக்குவரத்திற்கு பயனுள்ளதாய் இருக்கிறது. அதே வேளையில் எங்களின் வாழ்வாதாரமாய் உள்ள அச்சகம், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் போன்ற குறு, சிறு தொழில் நிறுவனங்கள் எவ்வித சிரமமும் இன்றி இயங்கினால் தான் எங்களைப் போன்ற பெண்களின் வேலைக்கு உத்தரவாதம் கிடைக்கும். எனவே தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் அதன் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் பட்ஜெட் அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். குரு சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஜெயலட்சுமி, அச்சக தொழிலாளி................வரவேற்பும், ஏமாற்றமும் உள்ளது.தமிழக அரசின் பட்ஜெட்டில் மாவட்டம் வாரியாக தொழில் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது வியாபாரம் செய்து வருவோர் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் இல்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது. வீடுகள் கட்டும் திட்டம், கல்வி திட்டம், பெண்கள் முன்னேற்றம், பறவைகள் சரணாலயம் அமைத்தல் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சொந்த கட்டிடம் இல்லாத நூலகங்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. இதில் அரசு கவனம் செலுத்தி இருக்கலாம். சுய தொழில் மேற்கொள்ளும் சாதாரண வியாபாரிகளை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்கி இருக்க வேண்டும்.-நித்தியானந்தம், வியாபாரி, ஸ்ரீவில்லிபுத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை