உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.270.77 கோடி மானியம்; 1.05 லட்சம் பேர் பயன் காதி ஆணையத் தலைவர் பேச்சு

பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.270.77 கோடி மானியம்; 1.05 லட்சம் பேர் பயன் காதி ஆணையத் தலைவர் பேச்சு

விருதுநகர்: 'பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும்திட்டத்தில் ரூ. 270.77 கோடி மானியம் விநியோகிக்கப்பட்டதால் 1.05 லட்சம் புதிய நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது'என விருதுநகரில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.விருதுநகரில் காதி கிராமத் தொழில்கள் ஆணையம், குறு சிறுநடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடந்த பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மானியத்தொகை விடுவிக்கும் நிகழ்ச்சியில் காதி, கிராமத்தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் பேசியதாவது:பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.270. 77 கோடி மானியம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது.இதனால் 9583 புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 413 புதிய நபர்களுக்குவேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ரூ.10 கோடி மானியமாகவும், மதுரை மண்டலத்திற்கு ரூ. 8.36 கோடி மானியமாகவும் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் முயற்சியால் முதல் முறையாக 2023 -- 2024நிதியாண்டில் காதி கிராமத் தொழில்களின் வர்த்தகம் ரூ. 1.5 லட்சம் கோடியை தாண்டியது.இந்த காலகட்டத்தில் 10.17 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 74 காதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 2023- -2024 நிதியாண்டில் காதி உற்பத்தி ரூ.224.12 கோடி, ரூ.397.63 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 872 கைவினைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.மதுரை கோட்ட அலுவலகத்தின் கீழ் 26 காதி நிறுவனங்கள் செயல்படுகின்றன.கடந்த நிதியாண்டில் ரூ. 58.48 கோடி உற்பத்தி,ரூ. 106.76 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மதுரை மண்டலத்தில் 3853 கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.முன்னதாக சிவகாசியில் ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதி பவன் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ