உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இருவர் கைது

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; இருவர் கைது

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் சரக்கு வேனில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., அழகுபாண்டி தலைமையில் போலீசார் பாலவநத்தம் ரோடு அருகில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை சோதனை செய்ததில் அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. மதுரையைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக், அவருடன் வந்த சக்திவேல் இருவரையும் போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை