உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 746 மாணவர்கள் பாடவாரியாக சென்டம்

746 மாணவர்கள் பாடவாரியாக சென்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 746 மாணவர்கள் பாடவாரியாக சென்டம் பெற்றுள்ளனர்.2023--24 கல்வியாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவில் மாவட்ட அளவில் பி.நேகா என்ற மாணவி 594 மதிப்பெண்களும், எஸ்.பி.லோகசக்திவேல் 593, ஹர்சிதா, நித்யாஸ்ரீ ஆகியோர் 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிவகாசி கல்வி மாவட்டத்தில் 97.63 சதவீதமும், விருதுநகர் மாவட்டத்தில் 95.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 221 பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 11, சமூக நலப்பள்ளிகள் 2, உதவி பெறும் பள்ளிகள் 21, தனியார் பள்ளிகள் 46 என 80 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.தமிழ் பாடத்தில் 12 மாணவர்கள், இயற்பியல் பாடத்தில் 26 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணிதம் 67, கணினி அறிவியல் 196, உயிரியல் 1, தாவரவியல் 3, விலங்கியல் 14, பொருளியல் 108, வணிகவியல் 190, கணக்குப்பதிவியல் 53, புவியியல் 2, வணிக கணிதம் 3, கணினி பயன்பாடுகள் 71, அடிப்படை மின் பொறியியல் 2 என பல்வேறு பாடங்களில் 746 மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை