உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்க்கரை குளம் தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கினை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கடந்த சில மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் மேல ரத வீதி, மாட வீதி, ஆண்டாள் கோயில், சக்கரைகுளம், என்.ஜி.ஓ. காலனி, நீதிமன்றம் பகுதிகளில் சுற்றி திரிந்தது.இதில் ஆண்டாள் கோயில் பகுதியில் சுற்றி பிறந்த 6 குரங்குகளையும், நீதிமன்றத்தில் திரிந்த 2 குரங்குகளையும் ஏற்கனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இருந்த போதிலும் மேலும் 2 குரங்குகள் சக்கரை குளம் தெரு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்தது.இந்நிலையில் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் சக்கரை குளம் தெருவில் கூண்டு வைத்து, நேற்று மாலை ஒரு குரங்கை பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட குரங்கை செண்பகத் தோப்பு வனப்பகுதிக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை