| ADDED : ஜூலை 20, 2024 12:13 AM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில்பிளஸ் டூ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிச்சாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகையில், மாணவர்களுக்கு கணினி, அறிவியல், கலை, தொழில் சார்ந்த துறை போன்ற துறைகளில் உள்ள உயர்கல்விகள் பற்றியும் படித்து முடித்தவுடன் எந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன என்றும் சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அவசியமாக உள்ளது.அதை எவ்வாறு எதிர்கொள்வது, கல்லுாரியை தேர்வு செய்யும் போது அந்த கல்லுாரியின் தரம், தேர்ச்சி விகிதம், அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு, தேசிய தரச் சான்றிதழ்களான நாக், என்.பி.ஏ., ஐ.எஸ்.ஓ., போன்ற தகுதிகள் இருக்கும் கல்லுாரியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், துாத்துக்குடி, தென்காசி பள்ளிக்கல்வித்துறை செய்தது.