உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வக்கணாங்குண்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

வக்கணாங்குண்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காரியாபட்டி: மதுரை துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டுவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மதுரை துாத்துக்குடி நான்கு வழிச் சாலை படு மோசமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர பெரிதும் சிரமம் ஏற்பட்டது. 2 மணி நேரத்தில் கடக்க வேண்டிய துாரத்தை 3 மணி நேரம் கடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதையடுத்து ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் மதுரை துாத்துக்குடி 128 கி.மீ., துாரத்திற்கு ரோடு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது காரியாபட்டி அருப்புக்கோட்டை வரையிலான ரோடு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே வழியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவராத்திரிக்கு குல தெய்வ வழிபாட்டிற்கு பெரும்பாலானவர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் வாகனங்களில் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. நேற்று காலை காரியாபட்டி வக்கணாங்குண்டு அருகே ரோடு சீரமைப்பு பணிக்காக ஒரு வழியில் சென்று வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர், பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மற்ற வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.போதிய அறிவிப்பு பலகை, எச்சரிக்கை பலகை என எதுவும் இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக வருகின்றனர். அருகில் வந்ததும் டைவர்சன் இருப்பது கண்டு நிலை தடுமாறுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை