உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: அப்துல்சமது எம்.எல்.ஏ., பேட்டி

வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: அப்துல்சமது எம்.எல்.ஏ., பேட்டி

சிவகாசி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., கூறினார்.மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சி எம்.எல்.ஏ., ஆன அவர் மேலும் கூறியதாவது:வக்பு வாரிய திருத்த சட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சூறையாடுவதற்கான சதி ஒளிந்து இருக்கிறது. வக்பு வாரியத்தை நீர்த்து போக செய்வதற்கான திட்டம் இது. வக்புவாரிய சொத்துக்களை தீர்மானிக்க கூடிய அதிகாரம் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் நினைத்தபடி மாற்றுவர். தற்போதைய நிலவரப்படி அச்சொத்துக்களில் 30 சதவீதம் அரசு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வக்பு நிலங்களாக மாற்றித்தர வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து மக்கள் மீது நடத்தப்படக்கூடிய தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதனை தடுத்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்புவாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து அ.தி.மு.க. கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை