நரிக்குடியில் ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி
நரிக்குடி: நரிக்குடியில் ஏ.டி.எம்., ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பிச்சப்பிள்ளையேந்தலை சேர்ந்த சாமியப்பனை 23, போலீசார் கைது செய்தனர்.நரிக்குடியில் இந்தியா ஒன் ஏ.டி.எம்., செயல்பட்டு வருகிறது. இதனை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் உரிமம் பெற்று நடத்தி வருகிறார். பிப். 13ல் பணம் நிரப்பி விட்டு சென்றார். 14ல் காலையில் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பார்த்த போது முன்பக்க மிஷின் உடைக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், பணம் தப்பியது. நரிக்குடி இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஐ., முகைதீன் அப்துல் காதர், போலீசார் விசாரித்து வந்தனர். சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பிச்சப்பிள்ளையேந்தலை சேர்ந்த சாமியப்பன் என தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.