உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

தளவாய்புரம், : ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புத்துார் தளவாய்புரம் மெயின் ரோட்டில் வாறுகால் அமைக்கும் பணிக்கும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மேல வரகுண ராமபுரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் பாலப் பணி, புத்துார் ஊராட்சி வாழவந்தாள் புரத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பணிக்கும் பூமி பூஜை நடந்தது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜெயராம் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நவமணி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி