உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகாலட்சுமி திட்ட வாக்குறுதிக்கு உத்தரவாத கார்டு வழங்கி ஆசை காட்டுவதாக புகார் விருதுநகர் தாலுகா அலுவலகத்தை பா.ஜ., காங்., முற்றுகை

மகாலட்சுமி திட்ட வாக்குறுதிக்கு உத்தரவாத கார்டு வழங்கி ஆசை காட்டுவதாக புகார் விருதுநகர் தாலுகா அலுவலகத்தை பா.ஜ., காங்., முற்றுகை

விருதுநகர்,- விருதுநகரில் காங். தேர்தல் வாக்குறுதியான மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் அறிவிப்புக்கு உத்தரவாத கார்டு வழங்கியதாக பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி காங்., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அதை எதிர்த்து காங்.,கட்சியினரும் முற்றுகையிட்டனர்.விருதுநகர் தந்திமரத்தெருவில் கடையில் காங்., கட்சியை சேர்ந்த காமராஜ் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகவெற்றி பெற்று ஆட்சி அமைத்தால்மகாலட்சுமி திட்டத்தில் தகுதியுள்ள பெண்களுக்குரூ.ஒரு லட்சம் பணம்வழங்கப்படும் என்ற உத்தரவாத கார்டு வழங்கினார்.இதில் சீரியல் எண் ,ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உட்பட முகவரியை பதிவு செய்து, இந்திய தேர்தல் சட்டமுறைக்கு எதிராகஆசை வார்த்தை கூறுவதாககூறிபா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார் சிவிஜில் செயலியில் புகார் அளித்தார்.இதையடுத்து நடமாடும் பறக்கும் படை அதிகாரிகள் காமராஜை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகயேனியிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் அலுவலகத்தில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா, மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், அரசு தொடர்பு தலைவர் ராஜகோபால், காங். தரப்பில் மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா, நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம் வந்தனர்.பா.ஜ., வேட்பாளர் ராதிகா கூறியதாவது: இது மக்களை திசை திருப்பி ஏமாற்றும் வேலை. சீரியல் எண், ஆதார் கார்டு, அலைபேசி எண் ஆகியவற்றை வைத்து எழுதி வைத்து விட்டு தான் உத்தரவாத கார்டு கொடுக்கின்றனர். நேற்று பிரசாரம் செய்யும் போது, பெண்கள் ரூ.1 லட்சம் தருவதாக பேசி கொண்டதை பார்த்தேன். தேச அளவில் இது தான் செய்வதாக கூறுகின்றனர். இவர்கள் செய்வதை அப்பாவி மக்கள் நம்புகின்றனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.காங். மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜா கூறியதாவது: ராகுல், மல்லிகார்ஜூன கார்கே இருவரும்கையெழுத்திட்டு தான் இந்த உத்தரவாத கார்டு நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறோம் என்பது போன்று குறிப்பிடவில்லை.மக்களை தவறாக வழிநடத்தவோ, ஆசை காட்டவோ செய்யவில்லை. தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட்டுள்ளோம் என்றார். பா.ஜ.,வினர் மன உளைச்சல் ஏற்படுத்தியதாக காங். தரப்பு சார்பில் புகார் அளித்தனர்.தேர்தல் அதிகாரிகள் விசாரிப்பதாக கூறியதன் பேரில் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ