உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடும் குடிநீர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.அருப்புக்கோட்டையில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய திட்டத்தில் குடிநீர் பகிர்மான குழாய்கள் ஆங்காங்கு உடைகிறது. நேற்று மதுரை ரோடு சி.எஸ் .ஐ., சர்ச் பகுதியில் குழாய் உடைந்து பல மணி நேரம் குடிநீர் வீணாக ரோட்டில் ஓடியது.இது போன்று ரோடு ஒரங்களில் குழாய்கள் அடிக்கடி உடைகிறது. உடைந்த குழாய்களை உடனடியாக சரி செய்து குடிநீரை வீணாக்காமல் இருக்க நகராட்சியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை