உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ‛உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

விருதுநகரில் ‛உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஆக. 28 காலை 9:00 மணிக்கு துவங்கி மறுநாள் (ஆக. 29) காலை 9:00 மணி வரை நடக்கிறது. இதில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை கலெக்டர், மாவட்ட அனைத்து நிலை அலுவலர்கள், மக்களின் குறைகள், நலத்திட்டங்கள், அலுவலகங்கள், சேவைகள் தடையின்றி நடப்பதை கள ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிதல், மாலை 6:00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்ற உள்ளனர்.விருதுநகர் தாலுகாவைச் சேர்ந்த மாணவர்கள் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை விண்ணப்பித்தல், ஆதார் பதிவு திருத்தம், இதர குறைகள் குறித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கலெக்டரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ