உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

விருதுநகர்: விருதுநகரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க 16,585 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டது. கைப்பந்து(ஆண்கள், பெண்கள் பிரிவு), ஹாக்கி (ஆண்கள், பெண்கள் பிரிவு), சதுரங்கம் (ஆண்கள், பெண்கள் பிரிவு), நீச்சல் (ஆண்கள், பெண்கள்) ஆகிய போட்டிகளில் சுமார் 1100 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் மணிமாறன், பள்ளி மாணவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை