கல்லுாரி சந்தை
விருதுநகர்: விருதுநகரில் வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கல்லுாரி நிர்வாகத்தின்வணிக மேலாண்மை துறை இணைந்து கல்லுாரி சந்தை நிகழ்ச்சியை ஆக. 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடத்தியது.இதில் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி, விற்பனை நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிந்தனா குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவங்கி வைத்தார். வணிக மேலாண்மை துறை தலைவர் சுகந்தி ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.