கணினி அறிவியல் தேர்வு: 47 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகரில் நடந்த கணினி அறிவியல் தேர்வில் 47 பேர் ஆப்சென்ட் ஆகினர்.3154 மாணவர்கள் 2213 மாணவிகள் என 5367 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 3130 மாணவர்கள், 2190 மாணவிகள் என 5320 மாணவர்கள் தேர்வெழுதினர். 47 பேர் ஆப்சென்ட் ஆகினர். கணினி பயன்பாடுகள் தேர்வில் 1619 மாணவர்கள், 1584 மாணவிகள், 3203 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 1585 மாணவர்கள், 1566 மாணவிகள் என 3151 மாணவர்கள் தேர்வெழுதினர். 52 பேர் ஆப்சென்ட் ஆகினர். இவை தவிர மனை அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின்னணு பொறியியல் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.