அரசுமருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டம்
திருச்சுழி : திருச்சுழி அரசு மருத்துவமனையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஸ்பீச் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய தொட்டில் குழந்தை திட்ட நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி கவிச்செல்வி தலைமை வகித்தார். டாக்டர்கள் காமாட்சி பாண்டியன், சமூகப் பணியாளர் கார்த்திகைராஜன், தொண்டு ஒருங்கிணைப்பாளர்கள் பிச்சை, சுரேந்திரன் கலந்து கொண்டனர். குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.