உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் வசதி

சிவகாசி மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் வசதி

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தினமும் உள் நோயாளிகளாக 600 பேர் வரை வருகின்றனர். வெளி நோயாளிகளாக 125 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வருகின்ற நபர்களுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கும் வசதி இல்லாத நிலை இருந்தது. இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இல்லையெனில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 2024 மார்ச் முதல் மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் மையம் துவங்கப்பட்டது. ஆனால் இது குறித்து பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாததால் தற்போதும் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரூ. 3000 வரை செலவழிக்கின்றனர். தலைமை டாக்டர் அய்யனார் கூறுகையில், சி.டி., ஸ்கேன் இல்லாத போது விபத்தில் காயமடைந்து வருபவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைத்தோம். தற்போது இங்கேயே அந்த வசதி வந்துள்ளது. எனவே அனைவரும்இலவசமாக சி.டி., ஸ்கேனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை