சைபர் கிரைம் விழிப்புணர்வு
விருதுநகர்: விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் ஜாக்ரோக்டா திவாஸ் என்ற அமைப்பில் பரிந்துரையின் பேரில் மாணவிகள் இடையே இணைய வழியில் இளைஞர்களை நோக்கி நடக்கும் குற்றங்கள், மோசடிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இணைய விழிப்புணர்வு தன்னார்வலராக இருந்து செயல்பட்டு வரும் மணி ராம் பேசினார். செயலிகளில் உள்ள விதிமுறைகளை முறையாக படித்த பின் அனுமதி கொடுக்க வேண்டும். ெதரியாத நபர்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண் விவரங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என பேசினார்.