உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்

ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்

சிவகாசி : வெம்பக்கோட்டை அருகே வேண்டுராயபுரம் வழியாக லட்சுமியாபுரம் கண்மாய் செல்லும் ஓடையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் செல்ல வழி இல்லை. ஓடையை துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி.ரெட்டியபட்டியில் இருந்து வேண்டுராயபுரம் வழியாக லட்சுமியாபுரம் கண்மாய்க்கு ஓடை செல்கிறது. இந்தக் கண்மாயினை நம்பி நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. மழை பெய்தால் இந்த ஓடை வழியாகத்தான் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். ஆனால் ஓடை முழுவதுமே சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. ஓடையும் துார்ந்துள்ளது. இதனால் சமீபத்தில் மழை பெய்தும், ஓடை வழியாக தண்ணீர் செல்லவில்லை. கண்மாய்க்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஓடையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !