உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான ரோடு, சமுதாய கூடம், மின்கம்பங்கள்

சேதமான ரோடு, சமுதாய கூடம், மின்கம்பங்கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தில் சேதமான ரோடுகள், சமுதாய கூடம், மின்கம்பங்கள், உட்பட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ராமானுஜபுரம் ஊராட்சி . இங்குள்ள 6 வார்டுகளில் 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இருந்து ஊருக்கு செல்லும் ரோடு மோசமானதாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. பள்ளி மாணவர்கள் புதர்களுக்குள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இங்கு கட்டப்பட்டுள்ள இ - சேவை மைய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து விட்டது. அருந்ததியர் காலனியில் பல மின்கம்பங்கள் சேதமாகி விட்டன. இங்குள்ள சமுதாய கட்டடம் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ளது. வேறு வழியின்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. ஊருக்கு மெயின் ரோடு வழியாக கண்மாய் பகுதியில் இருந்து பகிர்மான குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அதிர்வில் அடிக்கடி குழாய்கள் உடைகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஊரில் உள்ள போர்வெல்களில் வரும் தண்ணீர் உப்பு சுவையாக இருப்பதால் அதை பயன்படுத்த முடியாது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் ஊராட்சியில் அமைக்க வேண்டும்.ஊராட்சி கழிப்பறை இருந்தும் பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கு ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக நவீன சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.மயானத்திற்கு செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. மயானத்தில் தண்ணீர், தெருவிளக்கு வசதி மின்விளக்கு வசதி என எதுவும் இல்லை. இறுதி சடங்குகள் செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது. பல தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட வேண்டும். வாறுகால்களும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது.ஊராட்சியில் குப்பை வண்டிகள் இல்லாததால் குப்பை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. பழைய குப்பை வண்டிகளை பழுது பார்த்தும் புதிய குப்பை வண்டிகளை ஊராட்சிக்கு வழங்க வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாயை தூர்வாரி மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் தண்ணீர் குடிக்க தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் பயன்பாடு இன்றி உள்ளது. ஊராட்சி அலுவலக கட்டடம் உட்பகுதியில் சேதமடைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ