தாழ்வாக செல்லும் சிசிடிவி வயர்களால் ஆபத்து
விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் சிக்னல் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவின் வயர் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மதுரை ரோட்டில் கே.ஆர். கார்டன் திரும்பும் வழியின் அருகே சிக்னல் கம்பங்கள் உள்ளன. இது முக்கிய வளைவு பகுதி புத்தக திருவிழா, உணவு திருவிழா போன்றவை கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடத்தப்படுவதால், இந்த வளைவு பகுதியில் அதிகம் போக்குவரத்து இருக்கும். தற்போது இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த வயரை உயர்த்தி கட்ட வேண்டும்.காற்று வேறு விடாப்பிடியாக அடிப்பதால் தவறி விழுந்தால் விபத்து நிச்சயம் என்ற நிலை தான் உள்ளது. எனவே இதை சரி செய்ய வேண்டும்.