ஏமாற்றம்
மத்திய அரசின் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு மலிவு விலையில் வீடு கட்ட நிதி வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்கு 2.50 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.இதேபோன்று, தமிழகத்தில் எளிய மக்களின் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றி தர கலைஞர் கனவு இல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் நிதியை அரசு வழங்குகிறது. கிராமங்களில் இருக்கும் ஏழை மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாவிட்டால் வீடு கட்டுவதற்கான நிலத்தை அரசு வழங்கும்.மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பதிந்து பயனாளிகள் 3 ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இவர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் பணம் வரவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மாநில அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பதிந்தவர்களுக்கு உடன் வீடு கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பம் செய்திருப்பவர்கள் ஆண்டு கணக்கில் காத்திருந்தும் கிடைக்காததால், மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்றால், ஏற்கெனவே மத்திய அரசு திட்டத்தில் பதிந்துள்ளதால் மாநில திட்டத்தில் பதிய மறுக்கின்றனர். இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களில் பயன் பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர். இதில், பாதிப்பு அடைந்தவர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கி தருகின்றன. இரு திட்டங்களில் முதலில் யார் விண்ணப்பித்துள்ளார்களோ அதன் அடிப்படையில் வரிசையாக ஏதாவது ஒரு திட்டத்தில் வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு திட்டத்தில் நாங்கள் பதிந்து பல ஆண்டுகளாக காத்திருந்தும் வீடு கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்திலாவது விண்ணப்பிக்க சென்றால் மத்திய அரசு திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்துள் ளீர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது என கூறுகின்றனர். எங்களை மத்திய அரசு அலைகழிக்கிறது, மாநில அரசு ஒதுக்குகிறது என, புலம்புகின்றனர்.மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும் நிதி வராததால் அவர்களுக்கு மாநில அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பித்து வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க ே வண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.